India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 29) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 29) காயிதே மில்லத் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூரிலுள்ள திப்பு மற்றும் ஹைதர் மஹால், வேலூர் கோட்டை வளாகத்தினுள் அமைந்துள்ளது. இந்த திப்பு மகாலின் மத்தியில் ஹால் உடன் கூடிய 180 அறைகள் உள்ளன. அதே போல் ஹைதர் மகாலிலும் 200 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய ஆட்சியில் திப்பு வம்சத்தினர் இங்கு தான் தங்கவைக்கப்பட்டனர். தற்போது இந்த மகால் காவல் பயிற்சி அலுவலக நிர்வாக கட்டடமாக இருப்பதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று மாலை (மே 29) மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், மாநகர செயலாளர், ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் ஆகியோர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (மே 28) நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கேபிள் நிறுவனம் அனுமதி பெற்ற 144 இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களிலேயே பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (28.05.2024) பத்திரப்பதிவு துறை வரைவு வழிகாட்டி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட பதிவாளர் வெங்கடேஷ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கவசம்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா நேற்று (மே 27) நடந்தது. இந்த திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கூழ்வார்த்தல், மகா தீபாராதனை வெகு விமரிசையாக நடந்தது. இதில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 27) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 79 மதுபாட்டில்கள், 6 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 27) 103.8°F வெயில் பதிவானது. கடந்த சில நாட்களாக வேலூரில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் வெயிலுடன் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.