Vellore

News June 4, 2024

வேலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

image

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று வாக்கு எண்ணிக்கையின் போது பழுதடைந்தது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வி விபேட் இயந்திரங்கள் உள்ள வாக்குச் சீட்டினை எண்ணுவதற்கு  அனுமதி அளித்தனர். இதனை வாக்குச்சாவடி முகவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

News June 4, 2024

வேலூரில் உதயசூரியன் பிரகாசம்

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. முதல் சுற்றின் முடிவில், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 11,834 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். திமுக 29501 வாக்குகளும், பாஜக 17667 வாக்குகளும், அதிமுக 12536 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

வேலூர் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் திமுக கூட்டணி 29501, அதிமுக கூட்டணி 7136,  பாஜக கூட்டணி 17667. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11, 834 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.  பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பின்னடைவு.

News June 4, 2024

வேலூர்: முதல் சுற்று தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும் பணி காலை 8: 30 மணிக்கு தொடங்கி நடை[பெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி 7215,பா.ஜ.க கூட்டணி 2695, அ.தி.மு.க 635, தி.மு.க கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முதல் சுற்று முடிவில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

வேலூரில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

image

2024 தேர்தலில் வேலூர் தொகுதியில் மொத்தம் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கியது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் 7215 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும் 2695 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக சார்பில் பசுபதி 634 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

News June 4, 2024

வேலூரில் கதிர் ஆனந்த் முன்னிலை

image

வேலூர் மக்களவை தொகுதியின் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்.
திமுக கூட்டணி 7215 வாக்குகளும், பாஜக கூட்டணி 2695 வாக்குகளும், அதிமுக 635 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

வேலூர் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

image

மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்ன மையத்தில் இன்று எண்ணிக்கை தொடங்கியது. இதில் குடியாத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியது.

News June 4, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல் குழப்பம்

image

வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல், குழுப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பத்தால் தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News June 4, 2024

வேலூர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

BREAKING வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் பணி துவக்கம்

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2024 வேலூர் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையானது இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் என்னும் பணி துவங்கியது.

error: Content is protected !!