India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான (Micro observer) இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 11) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 12) நடந்தது. இந்த தபால் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்றிரவு (ஏப்ரல் 11) பிள்ளையார் குப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லோடு வேன் வந்தது. போலீசாரை பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் லோடு வேனை சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,100-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விசேஷ நாள்களில் சிறப்பு உணவுகள் வழங்கப்படும். அதன்படி நேற்று (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகையையொட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதனை கைதிகள் பலர் மகிழ்ச்சியுடன் உண்டனர் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம், ஹுசைன் புரா மசூதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் பாராளுமன்ற வேட்பாளரும், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இஸ்லாமிய சகோதரர்களுடன் ரமலான் பண்டிகையை கொண்டாடி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும் அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பிற மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த காவல் துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க நாளை (ஏப்ரல் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் அம்மணாங்குப்பம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக நேற்று (ஏப்ரல் 10) குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய வழக்கில் மணிவண்ணன் (51), பிரபு (32) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தலை எந்தவித அசம்பாவிதம் இன்றி நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பெட்ரோல், டீசலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இதுகுறித்து காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும். 261 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்.10) பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஏ.சி.சண்முகம், மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் கோட்டை மைதானத்தை இஸ்லாமிய பெருமக்கள் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தொழுகைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இது இஸ்லாமிய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.