India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து 33 கைதிகள் நேற்று (ஜூன் 15) சேலம் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடித்து செல்லப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகாந்த் – கீதா(31). கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூன் 14) மீண்டும் தகராறு ஏற்படவே, விரக்தியடைந்த கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுகள் ( யுபிஎஸ்சி) நாளை (ஜூன் 16) நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் தாள் 1 மற்றும் தாள் 2 என காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் 2222 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் சர்வதேச ரத்த தான தினத்தை முன்னிட்டு அதிகமுறை ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (ஜூன் 14) நடந்தது. இந்த விழாவிற்கு ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கலியமூர்த்தி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் வருகிற 18ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுதமபேட்டை கஸ்பா கங்கை அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று (ஜூன் 14) நடந்தது. இந்தத் தேர்த் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார். இதில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
காட்பாடி தனியார் மெட்ரிக் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக கூறி நேற்று மர்ம நபர் ஒருவர் இ-மெயில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பள்ளி தாளாளர் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மெயில் அனுப்பியது அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் என தெரியவந்தது. அந்த மாணவனை பெற்றோருடன் வரவழைத்து விசாரித்தனர். அதில் விளையாட்டுக்காக செய்தேன் என்று தெரிவித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் மினிபஸ் மூலம் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இன்று (ஜூன் 14) காஞ்சிபுரம் செல்லும் போது வேலூர் வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த சரக்கு வேன் மோதி மினி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 14) குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு பகுதியில் பார்வையிட்டு சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) ராஜவேலு, மருத்துவ கண்காணிப்பாளர் ரதி திலகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நாளை (ஜூன் 15) தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.