Vellore

News July 4, 2024

முன்னாள் துணை கலெக்டர் உயிரிழப்பு

image

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (89) (ஓய்வுபெற்ற துணை கலெக்டர்). இவர் இன்று (ஜூலை 4) ஓய்வூதியம் பெறுவதற்காக உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News July 4, 2024

வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் (இரவு 8.30 வரை) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண் பாண்டங்கள் செய்தல், வீடு கட்டுதல் உள்ளிட்ட சொந்த பயன்பாடு மற்றும் இதர பயன்பாட்டிற்கு தேவையான வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை தங்கள் கிராம ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கலெக்டர் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

News July 4, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

image

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு நேற்று (ஜூலை 3) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

News July 3, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

image

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூலை 3) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

News July 3, 2024

எஸ்.பி. தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை 3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 2, 2024

வேலூர்: 2847 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

image

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா முகாம்களிலும் 2847 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 2701 பயனாளிகளுக்கு ரூ. 19 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், 146 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று ( ஜூலை 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

பசுந்தீவனம் வளர்ப்பு – ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தோப்புகள், பழத்தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே பசுந்தீவனம் ஊடுபயிராக பயிரிடுவதற்கு திறமையும் ஆர்வமுள்ள பயனாளிகள் அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

விக்கிரவாண்டி விரைந்த வேலூர் போலீசார்

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேலூர் மாவட்டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இன்று (ஜூலை 2) விக்கிரவாண்டிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் வேலூர் மாவட்டத்திற்கு திரும்புவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!