Vellore

News July 11, 2024

வேலூர் எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும்போலீசார் நேற்று (ஜூலை 10) நடத்திய சோதனையில் 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார். தற்போது சாராய பிரச்சனை அரசுக்கு தலைவலியாக மாறியுள்ள நிலையில் மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

News July 10, 2024

வேலூர்: 170 செல்போன்கள் நாளை ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி காலை 11:30 மணியளவில் தொலைந்த/திருடுபோன செல்போன்கள் செல் ட்ராக்கர் மற்றும் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்ட 170 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளார் என காவல் துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 10) தெரிவித்தனர்.

News July 10, 2024

வேலூர் CMC மருத்துவமனையில் சூப்பர் வேலை

image

வேலூர் CMC மருத்துவமனை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், Medical Lab Technician, AHS Medical Lab Technician போன்ற பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு B.Sc/ DMLT என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் <>www.cmch-vellore.edu <<>>என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 10, 2024

பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை

image

பேர்ணாம்பட்டு அருகே கோட்டையூர் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் 4 மாடுகள், 1 கன்று குட்டி வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கவ்வி இழுத்து செல்ல முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 9) நடத்திய சோதனையில் 42 மதுபாட்டில்கள் மற்றும் 580 ரூபாய் மதிப்புடைய குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News July 10, 2024

தமிழ் செம்மல் விருது ஆட்சியர் அறிவிப்பு 

image

வேலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ரூ.25,000 பரிசுத் தொகை, தகுதியுரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில்  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஆக.12 க்குள் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர்  சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

சிப்பாய் புரட்சியின் நினைவு தினம் அனுசரிப்பு

image

வேலூரில் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஜூலை 10) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் மக்கான் சிக்னல் அருகே உள்ள நினைவு தூணுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.  இதில் வேலூர் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News July 8, 2024

155 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 8) நடத்திய சோதனையில் 155 லிட்டர் கள்ளச்சாராயம், 40 மதுபாட்டில்கள், 60 கிலோ வெள்ளம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 11 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

வேலூரில் சிறப்பு மனுநீதி முகாம் – கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம் வேலூர் வட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் வருகிற (ஜூலை 10) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 8) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

வேலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் இடமாற்றம்

image

வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் இயங்கி வந்த தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “ஏ” பிளாக்கில் அறை எண் 415-ற்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 8) தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!