India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 33 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை சென்னையில் வேலூர் சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. சக்திவேல் என்பவரை கழுத்தை அறுத்த வழக்கில் 2020ம் ஆண்டு முத்துராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று தற்போது கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று(ஜூலை 24) பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தனலட்சுமி (பொ) மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளை தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதில் மின் கட்டண உயர்வு, தமிழகத்திற்கு காவிரி நதி நீரை திறக்காத கர்நாடக அரசும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 24) வெயில் அளவு சற்று குறைந்து 93°F டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவானது. மேலும் வேலூரில் காலை முதல் வானம் மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் சிறு சாரல் மழையும் பெய்தது. குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லாத இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 24) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை24) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உட்பட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்க மேலும் ஓராண்டா எனக் கேட்டுள்ள ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காட்பாடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் பேஸ்புக்கில் ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரூ.4 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் கட்டிய பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.