India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி சேர்காடு பகுதியில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.12.46 கோடி மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை வேலூர் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்டது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. பிரிட்டிஷுக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது. வேலூரின் அடையாளமான இக்கோட்டைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 28) நடத்திய சோதனையில், 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அவசரகால சிகிச்சை, முதலுதவி மற்றும் பொது மருத்துவ முகாம்களை நடத்தி தீயணைப்பு வீரர்களுக்கு உதவிட வேலூரைச் சேர்ந்த டாக்டர் அ.மு.இக்ரம் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் அவைத்தலைவர் ஜனார்த்தனன், செயலாளர் சிவவடிவு உள்ளிட்டோர் இன்று (ஜூலை 28) பாராட்டு தெரிவித்தனர்.
விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த திருமலை(28) மற்றும் அணைக்கட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ராமு (22) ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 28) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு ஆணையை பிறப்பித்தார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமும் சில இடங்களில் இருந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நேற்று அதிகபட்சமாக நாகையில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் 2024-25 ஆண்டிற்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வது நேற்று முதல் தொடங்கியது. இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 13ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், ஆகஸ்ட் 20ஆம் தேதி பொது கலந்தாய்வும் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 27 மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 21,654 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 900 மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல் கோரி அதிக மனுக்கள் வருகிறது’ என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.