India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட் 5) இரவு பலத்த மழை பெய்தது. இதில் காட்பாடியில் அதிகபட்சமாக 79.40 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 6.20 மி.மீ மழையும், ஒடுகத்தூர் 8.00 மி.மீ , கே.வி.குப்பம் 65.60 மி.மீ, பேர்ணாம்பட்டு 3.20 மி.மீ, பொன்னை 17.80 மி. மீ , மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 388.60 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 6 தாலுகாவுக்கு தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இந்த கவுன்டர்களில் பொதுமக்களின் மனுக்களை சீலிட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், கவுண்டர்களின் மூலம் அதிக மனுக்கள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஆகஸ்ட் 5) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பஸ்களில் செல்வதை பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்தில் செல்வதை போன்று உணருகின்றனர் என பேசினார். இதில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் தேஜாஸ் அஜீத்குமார், ராஜேஷ், பூர்ணசந்திரன், கார்த்திகேயன் அபினேஷ் மற்றும் போக்சோ வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் விருபாட்சிபுரம் சேர்ந்த தினேஷ் ஆகிய 7 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று (ஆகஸ்ட் 5) மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஊராட்சிகளில் நாளை (ஆகஸ்ட் 6) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வெப்பச் சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதில் இருந்து மக்கள் விரைவில் மீண்டுவர வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமைச்செயலகத்தில் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை (DD) வழங்கியுள்ளார்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பயோ டெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் https://careers.vit.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வேளாண்மை பொறியியல் துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் சோமு, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணி, வேலூர் வட்டாட்சியர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 5) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.