India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி நாகம்மா (65) இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல மருத்துவமனையில் அமரர் ஊர்தி வாகனம் இல்லாததால் சடலத்தை பைக்கில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 01.07.2024 முதல் 31.07.2024 வரை மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள், மதுவிலக்கு வழக்கு மற்றும் பாலியல் வழக்குகளில் தொடர்புடைய 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று
(ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட் 5) இரவு பலத்த மழை பெய்தது. இதில் காட்பாடியில் அதிகபட்சமாக 79.40 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 6.20 மி.மீ மழையும், ஒடுகத்தூர் 8.00 மி.மீ , கே.வி.குப்பம் 65.60 மி.மீ, பேர்ணாம்பட்டு 3.20 மி.மீ, பொன்னை 17.80 மி. மீ , மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 388.60 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 6 தாலுகாவுக்கு தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இந்த கவுன்டர்களில் பொதுமக்களின் மனுக்களை சீலிட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், கவுண்டர்களின் மூலம் அதிக மனுக்கள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஆகஸ்ட் 5) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பஸ்களில் செல்வதை பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்தில் செல்வதை போன்று உணருகின்றனர் என பேசினார். இதில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் தேஜாஸ் அஜீத்குமார், ராஜேஷ், பூர்ணசந்திரன், கார்த்திகேயன் அபினேஷ் மற்றும் போக்சோ வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் விருபாட்சிபுரம் சேர்ந்த தினேஷ் ஆகிய 7 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று (ஆகஸ்ட் 5) மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஊராட்சிகளில் நாளை (ஆகஸ்ட் 6) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.