Vellore

News August 8, 2024

வேலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

image

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வந்த மதிவாணன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்ட்டுள்ளார். ஏற்கெனவே, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றம் செய்ப்பட்டுள்ளார். ஆனால், அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

News August 8, 2024

5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.

News August 8, 2024

வேலூரில் கணினிமயமாகும் கூட்டுறவு சங்கங்கள்

image

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்து பதிவாளர் என்.சுப்பையா நேற்று (ஆகஸ்ட் 7) ஆய்வு செய்தார். அப்போது, கணினி வங்கி பணப்பரிவர்த்தனை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கணினி மயமாக்கும் பணிகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் கணினி மயமாக்கப்படும் என தெரிவித்தார்.

News August 8, 2024

குடியாத்தம் மாணவர் சிலம்பம் போட்டியில் சாதனை

image

தமிழகம் பாரம்பரிய சிலம்பம் உலக சங்கம் நடத்திய உலக அளவிலான சிலம்பம் போட்டி 06.08.24 அன்று பாண்டிச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் KMG கலை&அறிவியல் கல்லூரி, இளநிலை இரண்டாம் ஆண்டு கணினிப் பயன்பாட்டில் துறையை சார்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சூப்பர் சீனியர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து அதற்கான பரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.

News August 7, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 12 மதுபாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் மதிப்புடைய 300 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News August 7, 2024

வீடு தேடி வரும் தேசியக் கொடி

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த தேசியக்கொடிகளை https:/www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று
10ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 7, 2024

வேலூரில் இரத்த தான முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

வேலூர் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, கல்லூரி முதல்வர் மேகலா, மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News August 7, 2024

தமிழக ரயில்வே துறைக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு

image

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய பொது செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, திமுக அரசு கனிம வளங்களை கொள்ளை அடித்து நாசம் செய்கிறார்கள், இந்திய கூட்டணியில் உள்ளவர்கள் மக்களை திசை திருப்பவே குறை கூறி வருகின்றனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறையில் ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.

News August 6, 2024

வேலூர் மாவட்டத்தில் 15 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 6) நடத்திய சோதனையில் 15 மதுபாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் மதிப்புடைய 200 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!