Vellore

News August 18, 2024

வேலூர் மாவட்டத்தில் 104 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 18) நடத்திய சோதனையில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

வேலூரில் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24- ல் மாநில அரசின் விருது பெற சிறந்த சேவை மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக 30.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி தகவல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 17) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 41 மதுபாட்டில்கள், 4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

வதந்திகளை நம்ம வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் மூன்று நாட்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் புதிய விண்ணப்பங்கள் அளிக்கலாம் என வாட்ஸ் அப் மூலம் பரப்பும் தகவல்கள் உண்மைக்கு மாறானது. எனவே, இச்செய்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 17) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சிறப்பு பேருந்துகள்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆவனி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்தில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்து 50 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்துகளும், ஆற்காடில் இருந்து 20 பேருந்துகளும் நாளை 18, 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News August 17, 2024

வேலூர் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆக 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

ஒரே நாளில் 5 பேர் வழக்கு பதிவு – எஸ்பி

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 16) சோதனையில் ஈடுபட்டனர். இதில் 88 மதுபாட்டில்கள், 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News August 16, 2024

வேலூரில் எம்எல்ஏ ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 56வது வார்டில் உள்ள குமாரசாமி தெருவில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 16) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இளநிலை பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 16, 2024

வேலூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 17) மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

வேலூரில் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 11 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 583 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

error: Content is protected !!