India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 116 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட குழந்தைகள், பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் இன்று (ஆகஸ்ட் 21) எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை கட்டாய திருமணம் செய்யக்கூடாது, பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு இலவச உதவி எண் 1098 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
வேலூரில் நேற்று இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 286 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இதில் 204 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நாளை உடற்திறன் நடைபெறும். மேலும், இன்று 602 பேருக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாம்களில் மொத்தம் 33,365 மனுக்கள் வந்துள்ளன. இதில் உடனடியாக 4,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 28,540 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 56 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 600 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. வேலூர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 57 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏரளாமானோர் விண்ணப்பித்திருந்தனர்.<
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3ஆவது புதன்கிழமை தாலுகா அளவில் கலெக்டர் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை (ஆகஸ்ட் 21) வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.