Vellore

News August 27, 2024

வேலூரில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு குண்டாஸ்

image

வேலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சரவணன் (41) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் மாவாட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் நேற்று (ஆகஸ்ட் 26) சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

News August 26, 2024

வேலூர் அருகே தங்க நகையை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

image

காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

News August 26, 2024

ரஜினியிடம் வருத்தம் தெரிவிப்பதாக துரைமுருகன் பேச்சு

image

சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து நடிகர் ரஜினி பேசியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, அமைச்சர் துரை முருகன் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து, வயதானவர்கள் எல்லாம் நடிப்பதினால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்று கூறியிருந்தார். அதற்கு தற்போது ரஜினிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

News August 26, 2024

வேலூரில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

image

வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக 25) நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி, மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News August 26, 2024

வேலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. இதில் 75க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் <>www.tnprivatejobs.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 26, 2024

சென்னையில் நடந்த கராத்தே போட்டியில் வேலூர் மாணவன் முதலிடம்

image

சென்னையில் நேற்று நடந்த மாநில அளவிலான 16 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட கராத்தே போட்டியில், கீழ்மனவூர் ஆவாரம்பாளையம் பகுதியை சார்ந்த வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 25, 2024

வேலூரில் காவல்துறை இரவு ரோந்து பணி காவலர்கள்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு (ஆகஸ்ட் 25) ரோந்து பணி செல்லும் காவல்துறை அதிகாரிகளின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் வாசுகி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்- 9498160655.

News August 25, 2024

கிருபானந்த வாரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

image

திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று மாலை (ஆகஸ்ட் 25) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 25, 2024

வேலூரில் வெளியானது “கடமை”

image

வேலூர் மாவட்டம், தனியார் திரையரங்கில் புதிதாக தமிழில் வெளியாகியுள்ள “கடமை” திரைப்படத்தின் இயக்குனர் சுக்கிரன் சங்கர் இன்று பொதுமக்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். மேலும், சிறிய தயாரிப்பில் வெளிவரும் படங்களை பொதுமக்கள் பெரிதளவில் ஆதரிக்கின்றனர் என்றும், சிறிய படங்கள் நல்ல கதை அம்சத்துடன் இருந்தால் பொதுமக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

News August 25, 2024

குடியாத்தம் அருகே சொந்த தம்பியை கொலை செய்த அண்ணன்

image

குடியாத்தம் அருகே சொத்து பிரச்சனையால் சொந்த தம்பியை குத்திக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவியரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது கவியரசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!