Vellore

News August 29, 2024

வேலூரில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31ஆம் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 29, 2024

வேலூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கான வட்டார கிராம வறுமை குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

குடியாத்தம் அருகே உணவகத்தில் மது பாட்டில் விற்றவர் கைது

image

குடியாத்தம் அடுத்த மேலாலத்தூர் பகுதியில் தனியார் உணவகத்தில் மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த உணவகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் கர்நாடக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், உணவக உரிமையாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 29, 2024

வேலூர் அருகே ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

image

வேலூர் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசையை சேர்ந்த ராஜேஷ் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட ராஜேஷின் உடலுக்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்தும், தேசிய கொடி போர்த்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News August 29, 2024

வேலூர் அருகே வாலிபரிடம் ரூ.37 லட்சம் மோசடி

image

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 28) நடந்தது. இதில் அணைக்கட்டை சேர்ந்த வாலிபர் அளித்துள்ள மனுவில்; தனது ஊரைச் சேர்ந்த பெண்ணும், வாலாஜா பகுதியைச் சேர்ந்த பெண்ணும் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறினார். இதையடுத்து நான் இதுவரை ரூ. 37 லட்சம் கொடுத்துள்ளேன். ஆனால் வட்டி பணம் தரவில்லை என மனு அளித்தார்.

News August 29, 2024

வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

image

வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளது. எனவே இதில் 30-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, 31-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

image

வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே இதில் 30-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, 31-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

வேலூர் மாவட்டத்தில் 55 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் இன்று (ஆகஸ்ட் 28) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 26) இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (நாகராஜன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498109959

News August 28, 2024

வேலூர் மாவட்டத்தில் செல்போன்கள் ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 29) செல் ட்ராக்கர் மற்றும் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்ட 232 தொலைந்த/களவுபோன செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 28) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!