India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரைகளை பைக்கில் எடுத்து சென்ற ஒல்டுடவுன் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார், அபிஷேக், பூபாலன் விக்னேஷ் சிவகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக படுக்கை வசதி கொண்ட 15 அதிநவீன் சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 புதிய பஸ் சேவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 90 கோடி 52 லட்ச ரூபாய் செலவில் 150 பிஎஸ் 6 ரக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக 15 அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தால் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் சேர மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நேரில் அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று செப்டம்பர்-4 இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (சீனிவாசன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. தொடர்புக்கு எண்-9498149544
வேலூர் கொசப்பேட்டையில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கவுள்ளார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலூரில் வாக்காளர் இரட்டை பதிவு, இறப்பு நீக்கம் உள்ளிட்டவை வீடு வீடாக சென்று சரிபார்த்து அக்.29-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ.28-ஆம் தேதி வரை பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு , 6.01.2026-இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேலூர் அரசு பென்ட்லேண்ட் பொது மருத்துவமனையில் கலெக்டர் இன்று செப்டம்பர்-4 ஆய்வு செய்தார். பின்னர் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு இருக்கை வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மகப்பேறு உதவித்தொகை முறையாக வழங்கப்படுகிறதா எனவும், தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அட்டவணையின்படி உரிய மாதத்தில் செலுத்திப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
வேலூர் மாவட்டம் மேல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வசந்த், பத்தலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் பாபு, கேவி குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பூவிழி ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு வேலூர் மாவட்டம் பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன்,ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கோட்டீஸ்வரி, கர்ணாம்பட்டு உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் குமார், பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்குகிறார்.
வேலூரில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதுப்பேரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 03) பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலையை எளிதில் கரைக்கும் வசதியாக கூடுதலாக ஒரு குட்டை அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஊர்வலம் செல்லும் சாலையான சைதாப்பேட்டை பகுதியில் கடையின் முன்பு உள்ள தகர சீட்டுகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.