India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டி ஐ ஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு விரைந்தனர். சேலம் மத்திய சிறையில் இன்றும், வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
வேலூர் கோட்ட அஞ்சல் துறை குறைதீர்வு கூட்டம் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் 13-ஆம் தேதிக்குள் அஞ்சல் கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வேலூரில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (11-09-2024) நடைபெற உள்ளதால் புதிய,பழைய பஸ் நிலையம்,பைபாஸ் சாலை,தோட்டப்பாளையம்,வேலூர்டவுன், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், இறைவன்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான வல்லண்டராமம், விரிஞ்சிபுரம் , இறைவன்காடு அதன் சுற்றயுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரின் இன்று (செப்டம்பர் 9) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாதுகாப்பு பணியில் எஸ். பி.மதிவாணன் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 1,072 காவலர்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 150 ஊர்காவல் படையினர் என மொத்தம் 1300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணாம்பட்டு நகரம், பாலூர், ஓம்குப்பம் , கொத்தூர், குண்டலப்பல்லி , சாத்கர், ஏரிகுத்தி , எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி , பல்லாலகுப்பம் , அரவட்லா ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என குடியாத்தம் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 8) நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.