India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ஆணைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் நேற்று (செப்.11) ஆய்வு செய்தனர். மேலும், விமான நிலையத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி உள்ளது எனவும், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்க மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 11) நடத்திய சோதனையில் 53 மதுபாட்டில்கள் மற்றும் 150 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் (செப்டம்பர் 14) தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று ( செப் 11) நடந்தது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் சந்திரதாசன் ஆகியோர் தலைமையில் நடந்த குறைதீர்க்க கூட்டத்தில் 38 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் 4.25 லட்சம் திருடிய வழக்கில் கைதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் சென்னை சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 11) விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பின்னர் நிருபர்களிடம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்.இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு உள்ளது.நம் நாட்டின் ஐஸ்கிரீம் நல்ல தரத்தில் உள்ளது என தெரிவித்தார்.
வேலூர் முத்துமண்டபம், அல்லாபுரம், சத்துவாச்சாரி ஆகிய இடங்களில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று செப்டம்பர் 11 முதல் 13 வரை வேலூர் மாநகராட்சி குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க இயலாது. எனவே பொதுமக்கள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள என கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்தினருடன் நேற்று (செப்டம்பர் 10) ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அவர், சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் பகுதியில் இன்று (செப்டம்பர் 11) தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் “உயர்வுக்கு படி”முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டி ஐ ஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு விரைந்தனர். சேலம் மத்திய சிறையில் இன்றும், வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.