India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 09) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று (பிப்.9) தொடங்கப்பட்டது. இதன் தொடக்கமாக இன்று (பிப்.9) காலை உணவு வழங்கபட்டது. இந்நிகழ்வில் நகரமன்றத் தலைவரும் நகர திமுக செயலாளருமான எஸ்.சௌந்தர ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 வட்டாரங்களில் தலா 3 குழுக்கள் வீதம் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் இறந்த பறவைகளை தொட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மேலும் பறவைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனை அணுக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<

சித்தூர்கேடை சேர்ந்த அக்பர் பாஷா கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார். யதார்த்தமாக அக்பர் வீட்டுக்கு போன் செய்வதை, சண்டைக்கு ஆள் சேர்கிறார் என தவறாக நினைத்த இஸ்மாயில், அக்பரை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார்.இதில் காயமடைந்த அக்பர்பாஷா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் இஸ்மாயில், ஆஜாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

வேலூர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் அதே பகுதியில் ஊதுபத்தி கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.8) அதிகாலை திடீரென குச்சிகள் வைத்திருந்த மூட்டைகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து செந்தில்குமார், முன்விரோதம் காரணமாக தொழிற்சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

பள்ளிக்குப்பத்தை சேர்ந்த திவாகர் (25). கடந்த 31-ந் தேதி ஏரிக்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி காட்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், திவாகர் ஏற்கனவே வெங்கடேசன் (2022) என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளது தெறித்தது. இந்த வழக்கில் ராகுல் (24) ஹரிஷ்குமார் (24), விஜய் ஆகியோரை விசாரித்ததில் முன் விரோதம் காரணமாக திவாகரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.