India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், பள்ளி கல்வித்துறை இணைந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பார்வையிடுவதற்காக விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் துணைமேயர் சுனில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும் போது, அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்தவுடன் கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
வேலூர் மாநகராட்சியில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த வருவாய் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உட்பட 23 பேர் வெவ்வேறு மண்டலங்களுக்கும், மாநகராட்சிக்கும் பணியிடமாற்றம் செய்து கமிஷனர் ஜானகி உத்தரவிட்டுள்ளார். மேலும், உடனடியாக இந்த பணியிடத்திற்கு சென்று பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. .
இந்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் சிறு, குறு தொழில்நிறுவன வளர்ச்சி வங்கி சார்பில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சுப்புலெட்சுமி தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதல் நிலை எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி 48 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 13 ஆயிரத்து 139 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைக்கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக வேலூர் டிஐஜி மீது சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சென்னை சரக டிஐஜி முருகேசன் வேலூர் சரக டிஐஜியாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை சிறைக் காவலர்கள் தாக்கியது தொடர்பான வழக்கில் சென்னை சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 12) மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் சேர மத்திய அரசு வலியுறுத்துவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இரு மொழி கொள்கையை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று சொன்னவர் அண்ணா. இதில் நாங்கள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் ஆகியோர் eShram என்ற வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோக திட்டத்தின் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.