India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர் பிரியாணி செய்யும் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்டனர். மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, வேலூரில் தி.மகேஷ் ஆனந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (மார்ச் 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் முதல் கட்ட பயிற்சி மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 23) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 23) நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்பாளர் பசுபதியை அறிமுகம் செய்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி (வல்லம்) சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், ஏ.சி.சண்முகம்-ரஜினிகாந்த் இடையேயான நட்பு, ஆன்மிக ரீதியிலான கருத்தொற்றுமை, பிணைப்பு அலாதியானது என்கின்றனர் அவர்களைப் பற்றி விவரமறிந்தவர்கள்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்டதாக காட்பாடியில் ரூ.9,49,500, அணைக்கட்டில் ரூ.5,89,500, குடியாத்தத்தில் ரூ.5,12,200, வேலூரில் ரூ.5,03,790, கே.வி.குப்பத்தில் ரூ.4,05,950 என மொத்தம் ரூ.29,60,940 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.