Vellore

News March 26, 2024

வேலூர் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

image

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பூபதி (51)  குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் நேற்றிரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டுள்ளார். இன்று (மார்ச் 26) காலையும் அறையை விட்டு வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, பூபதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2024

வேலூர் ஒரே நாளில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 26, 2024

பைக் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

image

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில்  பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News March 26, 2024

வேலூர்: 10ஆம் வகுப்பு தேர்வு… கலெக்டர் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள முஸ்லிம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 26, 2024

தயார் நிலையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 26) தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி அழைப்பது போன்று பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது.

News March 26, 2024

மாற்றுத்திறனாளிகள் முகாம் தற்காலிக நிறுத்தம்

image

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வழக்கம்போல் நடைபெறும் என்று வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

வேலூர்: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்

image

வேலூர் மாவட்டம், காட்பாடி டவுன் பகுதியில் நடைபெற்ற அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில்தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டம் கொண்டு வந்தவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்திவரும் நம்முடைய முதலமைச்சர் என்றார்.

News March 25, 2024

வேலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் இன்று (மார்ச் 25) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

வேலூர் 45 லட்சம் பறிமுதல் கலெக்டர் தகவல்

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (மார்ச் 24) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 45,28. 260 ரொக்கப்பணமும், 281 மதுபாட்டில்களும், 634  பட்டு சேலைகளும், சுடிதார் ஆடைகளும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, வேலூர் எம்பி தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் பசுபதி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.