India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் வேறு உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றால் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர், மாணவிகள் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
காட்பாடி தாராபடவேடு பாறைமேடு பகுதியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி , மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 2) நடத்திய சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், 20 லிட்டர் கள்ளச்சாராயம், 232 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் நேற்று கடைகளில் குடிமகன்கள் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கினர். இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 103 கடைகளில் வழக்கமாக 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5.25 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனஷிக்சா கலாலயம் சார்பில் போதை பொருள் தடுப்பு, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (அக்டோபர் 2) மாலை 5 மணி அளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 15,000 மாணவ மாணவிகள் பங்கு பெறும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், கல்லூரியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு சான்று மற்றும் உரிமம் அனைத்து ஆவணங்களுடன் வருகிற 10-ஆம் தேதிக்குள் http://tnswp.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறும் மற்றும் உரிமம் பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் சிறையில் சென்னையை சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி தீபிகா நேற்று மாலை சிறையில் தனது கணவரை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த தீபிகா சிறையில் தனி அறையில் எனது கணவரை அடைத்து சித்ரவதை செய்கின்றனர். கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்கு ஜெயிலர் ஒருவர் 1 லட்சம் கேட்பதாகவும், இல்லையென்றால் என்கவுண்டர் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என கூறினார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 20 லிட்டர் கள்ளச்சாராயம், 217 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.