India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தல் முன்னிட்டு வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான 33 வகையான பொருட்களை இன்று (ஏப்ரல் 16) வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆரணியை சேர்ந்த கார்த்திகேயன்(54), நேற்றிரவு பைக்கில் தனது உறவினரான சசிகலா (37) என்பவருடன் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினார். அப்போது கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் ஓட்டி வந்த பைக் மீது உரசியதில், பைக் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலா சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (ஏப்ரல் 15) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
நேற்றிரவு 7 மணியளவில் வேலூர் மாநகரில் பாகாயம் பகுதியில், வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான் எம்ஜிஆரின் ரசிகன். இந்தத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவமனை நடத்தி நிறைய மக்கள் சேவையை தொடர்ந்து செய்துவரும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் நேற்று (ஏப்ரல் 15) ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1000 டி-ஷர்ட்டுகள் பறிமுதல் செய்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார், தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 15) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 330 லிட்டர் கள்ளச்சாராயம், 110 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) முனீஸ்வரருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி பகுதியில் அவரது மனைவி சங்கீதா கதிர்ஆனந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், சிற்றுண்டி கடையில் இட்லி சுட்டு வாக்குகள் சேகரித்தார்.
Sorry, no posts matched your criteria.