India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 17) அதிகபட்ச வெயிலாக 104.9°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூரில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது. வெளி மாவட்டங்களை சார்ந்த நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் . மேலும் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி முதல் (ஏப்ரல் 19) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க 260 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினரின் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று (ஏப்ரல் 17) வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 16) அதிகபட்ச வெயிலாக 101.5°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் வேலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 63 வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று (ஏப்ரல் 16) வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர். கடை மூடும் நேரம் வரை வாசலில் முண்டியடித்துக் கொண்டு மது வகைகளை வாங்கிச் சென்றனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1307 வாக்குச்சாவடி மையங்களில் 2268 காவல்துறை, பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான 179 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பிற்குத் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளதாக எஸ்பி மணிவண்ணன் நேற்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) சின்னபள்ளிகுப்பம், அரிமலை கூட்ரோடு, குருவராஜபாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.சி.குப்பம் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டு யுவராஜ், உதயகுமார், வெங்கடேசன் கார்திக் ஆகியோர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.