India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 7: 00 மணி முதல் 9 மணி வரை 10.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி இன்று (ஏப்ரல் 19)தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து வாக்கு பதிவுகள் நடந்து வருவதாகவும் அடுத்த கட்டமாக 11 மணிக்கு இரண்டாம் கட்ட நிலவரத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (ஏப்ரல் 19) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் தொரப்பாடி எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,40,222 பேர், பெண் வாக்காளர்கள் 7,87,838 மற்றும் மூன்றாம் பாலினம் 213 பேர் என மொத்தமாக 15,28,273 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1568 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் சுமார் 2268 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி காந்தி நகர் பகுதியில் டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 154வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்கை செலுத்தவந்த வாக்காளர்கள் வாக்கை செலுத்த முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
அணைக்கட்டு, பெரிய தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (12) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் மொட்டை மாடியில் அபினேஷ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே செல்லும் மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி அபினேஷ் காயமடைந்தார். இதையடுத்து அபினேஷை அவரது பெற்றோர் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனைவரும் மறக்காமல் நாளை வாக்கு செலுத்துவோம். உங்கள் தொகுதியில் யார் யார் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது அறப்போர் செயலியையோ அல்லது கீழ்காணும் அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். வேலூர் – https://www.youtube.com/watch?v=qIFgLMWaToU
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மண்டல வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா இன்று (ஏப்ரல் 18) தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் கோபி உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு கோட்டை காலனியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக சரண்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று (ஏப்ரல் 17) கலெக்டர் சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் , புதிய நிதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம் இன்று (ஏப்ரல் 17) இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது உரிய அனுமதியின்றி பைக் பேரணி நடத்தியதால் வேட்பாளர் உள்பட 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.