India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அமிர்தி விலங்கியல் பூங்கா. 25 ஹெக்டர் அளவு உள்ள இப்பூங்காவில் பாதி வனமாகவும் மீதி சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மலையேற்றம், காட்டு விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சி இருப்பதால் பார்வையாளர்களின் வருகை அதிமாகி வருகிறது. எதிர்காலத்தில் இந்த பூங்காவில் யானைகள் முகாம் அமைத்து, சீரமைக்கப்பட்டு முதன்மை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை 2 ஆம் ஆண்டு பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை என அரசின் உத்தரவு உள்ளது. இருப்பினும் நிர்வாகம் தேர்வு கட்டணம் செலுத்துமாறு கட்டாய படுத்தியுள்ளது. இதனால் 15திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது நிர்வாகம் கட்டணம் தேவையில்லை என்று கூறியது.
அணைக்கட்டை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் நேற்றிரவு (ஏப்ரல் 25) வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.25) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலூர், அண்ணாசாலையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.24) வேலூர் கன்சால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சிவசக்தி(26) குடி போதையில் வந்து நீதிபதியை பார்க்கவேண்டும் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்.24) காவல் ஆய்வாளரின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 27 மதுபாட்டில்கள்,2700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள்,2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி வேலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.