India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விதத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காரில் இருந்த 3 பேரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், வேப்பங்குப்பம், வேலூரில் தலா ஒரு வழக்கு என மாவட்டம் முழுவதும் 15 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நேற்று போலீசார் தெரிவித்தனர்.
குடியாத்தம் தட்டாங்குட்டை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். பவித்ரா தீபாவளிக்கு புது சேலை வாங்கி தரக்கோரி குமரேசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தீபாவளி கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த பவித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 1) நடத்திய சோதனையில் 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்ற செயல்கள் ஈடுபட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர் 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர் நேற்று தனது வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது அவர் பைக்கில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் நேற்று (அக்டோபர் 31) ஒரே நாளில் 6.75 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் (55) என்பவர் இன்று காலை காட்பாடியில் இருந்து சென்னை செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைமேடையில் ஏறாமல் எதிர் திசையில் இருந்து ஏறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.
மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரியில் கோரிக்கையை பதிவு செய்யலாம். இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் இன்று (நவ-1) முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.