Vellore

News May 10, 2024

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

image

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு  (மார்ச் 26) தொடங்கி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று மே (10) காலை 9: 30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in 2024 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 10, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 9) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 2 லிட்டர் கள்ளச்சாராயம், 57 மதுபாட்டில்கள், 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News May 10, 2024

வேலூர் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி நடைபெறுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 2000 க்கு அதிகமான மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரை கேட்டுக் கொண்டார்.

News May 9, 2024

ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

image

காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் இன்று ( மே 9 ) கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில்வே போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் பெட்டியில் 14 மூட்டைகளில் 20 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்து. கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ் குமார், பிரதீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 9, 2024

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 9) வெயில் மீண்டும் சதம் அடித்தது 100°F வெயில் கொளுத்தியது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வெளியில் சென்று வருகின்றனர். நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஜூஸ் மற்றும் மோர் வாங்கி பருகி வருகின்றனர்.

News May 9, 2024

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிறப்பு!

image

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். கோட்டையின் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கல்வெட்டின் படி, ஜலகண்டேஸ்வரர் அந்நாளில் ஜ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டுள்ளார். மிகத்தொன்மைக் கோயிலான இதில் கலைநயமிக்க சிலைகள் ஏராளம் இருக்கின்றன.

News May 9, 2024

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா, வருகிற (மே 14) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் போலீசார்

image

ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 போலீசார், 57 ஊர்க்காவல் படை வீரர்கள் என்று மொத்தம் 88 பேர் ஈடுபட உள்ளனர். அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வேலூரில் இருந்து புறப்பட்டு ஆந்திரா செல்கின்றனர். தேர்தல் பணி முடிந்த பின்னர் 14ஆம் தேதி வேலூருக்கு வர உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 9, 2024

வேலூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்

image

வேலூர் இடையன்சாத்து பகுதியில் பென்னாத்தூர் விஏஓ காசி நேற்று (மே 8) மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் காசி ஒப்படைத்தார். டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News May 8, 2024

அணைக்கட்டு: கனமழையால் வாழை மரங்கள் சேதம்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 100 டிகிரி க்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் அணைக்கட்டு வட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு பகுதியில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இன்று (மே 8) அதிகாலை பெய்த கனமழையில் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.