India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுகத்தூர் பீஞ்சமந்தை வெள்ளாண்டப்பன் கோவில் அமைந்துள்ளது. நேற்று 4-வது சனிக்கிழமையன்று பக்தர்கள் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. அதன்பேரில் அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டனர். விபச்சாரம் நடத்திய பச்சையப்பன், காசிம் ஆகிய 2 பேரை கைது செய்தனர் தலைமறைவான காட்பாடியை சேர்ந்த சரவணன் என்பவரை தேடிவருகின்றனர்.
பாமகவின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் கே.எல். இளவழகன். இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அதற்கு பதிலாக வேலூர் கிழக்கு மாவட்ட புதிய செயலாளராக ஜெகன் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இவருக்கு கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை எக்காரணம் கொண்டும் இருப்பு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். மேலும் பட்டாசு வகைகள் 125 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் எழுப்பக்கூடியதாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 19வது பட்டமளிப்பு விழா நாளை(அக்டோபர் 13) நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் துஷார் காந்தி பெஹரா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 11) நடத்திய சோதனையில் 42 மதுபாட்டில்கள், 2.600 கிலோ கிராம் குட்கா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 6 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கைம் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பதிவு செய்த சான்றுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் அடுத்த வேப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (27), மேளம் அடிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் நேற்று குமரேசனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூரை அடுத்த ஊனைவாணியம்பாடி பகுதியை சேர்ந்த வாலிபர் ராகேஷ்குமார். இவர் வேலூரில் உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அங்கு அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை மிகவும் தாமதமாக வழங்கியதாக வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சேவை குறைபாடு காரணமாக ராகேஷ்குமாருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை ஓட்டல் நிர்வாகம் வழங்கும்படி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.