India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி(வேலூர்), பெரம்பூர்(சென்னை) வழியாக இன்று(அக் 22) பயணிக்க வேண்டிய அகர்தலா ரயில் தாமதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு SMVT ரயில் நிலையத்தில் இருந்து இன்று(அக்டோபர் 22) காலை 10.15க்கு புறப்பட வேண்டிய 12503 அகர்தலா ஹம்சபார் ரயில், 9 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 21) நடத்திய சோதனையில் 128 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்கள் ஈடுபட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (அக்டோபர் 21) மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர், பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 402 மனுக்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
பேர்ணாம்பட்டு வன எல்லையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.பத்தரபல்லி, எருக்கம்பட்டு, அரவட்லா, நாயக்கனேரி, குண்டலபள்ளி, பல்லலகுப்பம் உள்ளிட்ட காப்பு காடுகளில் 15க்கும் மேற்பட்ட சிறுத்தை குட்டிகள் நடமாட்டம் இருக்கிறது. நேற்று கல்லேரி பகுதியில் விவசாயி பழனி நிலத்தில் சிறுத்தை ஒன்று கொட்டகையில் கட்டி வைத்து இருந்த கன்று குட்டியை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக் 21) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 21) நடந்தது. இதில், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள காவலர்கள் நினைவுத்தூணுக்கு வேலூர் சரக டிஐஜி தேவராணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 94 நிரந்தர பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி கேட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். இம்மனுக்கள் மீது ஆர்டிஓ, போலீஸ், தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஒரு கடைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். மீதமுள்ள 12 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெற்றோர் அல்லாத, ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 13 பைக்குகள் திருடுபோனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் தாலுகா காவல் நிலையம், பாகாயம் காவல் நிலையத்தில் 1, வேப்பங்குப்பம் 1, குடியாத்தம் தாலுகாவில் 7, மேல்பட்டியில் 3 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 பைக்குகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (28) இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு பணி முடித்துவிட்டு இன்று காலை பைக்கில் வீடு திரும்பினார். கருகம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு டவுன் பஸ்சின் பின்புறம் இவரது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.