Vellore

News October 26, 2024

காட்பாடியில் பிறந்தநாள் அன்றே பலியான மாணவர்

image

வேலூர் காகிதப்பட்டறை சேர்ந்தவர் சஞ்சய் (20) இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்ட ரங்காபுரத்தில் இருந்து பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் வழியாக செல்லும் போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 26, 2024

குடியாத்தத்தில் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம்

image

குடியாத்தத்தில் நாளை அதிமுக சார்பாக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் இருந்து 15 % உயர்த்தி வழங்கவும், பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து நாளை காலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

News October 26, 2024

வேலூர் மாவட்டத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

image

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்இ தேர்வு (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு) நாளை (அக்டோபர் 26) நடக்க உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் சாந்திநிகேதன், ஹோலிகிராஸ், கே.ஏ.கே. எம், தோட்டபாளையம், கொணவட்டம் உட்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மதியம் இரு வேளைகளில் நடைபெறுகிறது. காலையில் 1764 பேரும், மதியம் 9 பேரும் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 25, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளை பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் அக்டோபர் 28-ம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

வேலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (அக்.25) இன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கள பிரச்னைகளை கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

News October 25, 2024

வேலூர் மாவட்டத்தில் 12 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

image

வேலுார் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சீதா, கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் எஸ்ஐ குமார், சத்துவாச்சாரிக்கும், பாகாயம் எஸ்ஐ தென்னரசி, வேலூர் வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் என மொத்தம் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News October 25, 2024

வேலூர் மாவட்டத்தில் 75 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே  நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

வேலூர் கோட்டை கோயிலில் ரத்தன் டாடாவிற்கு மோட்சதீபம்

image

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மறைந்த ரத்தன் டாடாவின்  ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாளை (அக்டோபர் 25) கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே மோட்சதீபம் ஏற்றப்பட உள்ளது என ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் அன்பு நெஞ்சங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

News October 24, 2024

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு

image

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 24) காட்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்படும் நேரத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து இன்னும் சற்று நேரத்தில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News October 24, 2024

வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!