India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியும், காட்பாடி சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் கிளையை காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நாளை 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைக்கிறார் என சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தெரிவித்துள்ளார்.
வேலூர் லாங்கு பஜாரில் உள்ள பட்டாசு கடைகளில் அமெரிக்கன் ரெட், பார்பி பவுண்டைன், பியூட்டி, பீஸ்ட், துரந்தோ 60, பிளவர்-4, ஐபிஎஸ் ஷவர்ஸ், என பல வகையான புதிய ரக பட்டாசுகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதிய ரக பட்டாசு மற்றும் புத்தாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த டி.சி.குப்பம் சேர்ந்த ஜோதி- வேலு தாமதிக்கு 2 வயதில் வருண் கீர்த்திக் என்ற மகன் உள்ளார். நேற்று வருண் கீர்த்திக் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, வேலூர் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (53). பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நேற்று போக்சோவில் கீழ் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்இ தேர்வு (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு) 6 மையங்களில் நேற்று நடைபெற்றது. தேர்வினை 1764 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2 பிரிவுகளாக தேர்வு நடந்தது. இத்தேர்வினை 845 பேர் எழுதினர், 919 பேர் எழுதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நேற்று (அக்டோபர் 26) அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் அமைந்துள்ள இந்திய செஞ்சிலுவை சங்க முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 26) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பம்புசெட்டுகள் வீட்டில் இருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்க முடியும் என தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு கட்சியினர் திரண்டு வர வேண்டும் என வேலூர் மாவட்ட செயலாளர், பொறுப்பாளருமான வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொண்டர்கள் எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் அமைதியான முறையில் வாகனங்களில் சென்று பங்கேற்க வேண்டும். மாநாட்டிற்கு வரும்போது தொண்டர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் வைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை அக்டோபர் 27 நடைபெற உள்ளது பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்.பி.மதிவாணன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் 5 டி.எஸ்.பி, 13 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600 போலீசார் பாதுகாப்பு பணிக்காக இன்று புறப்பட்டு சென்றனர்.
Sorry, no posts matched your criteria.