India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் வரும் ஜன.5ஆம் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அதன்படி ஓட்டப் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. எனவும் நடைபெற உள்ளது. *ஷேர்*
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று (டிச.31) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையில் பழைய காயல், வெள்ளைப்பட்டி கிராமங்களில் சாகர் மித்ரா பல்நோக்கு பணியாளர்களாக பணிபுரிய 35 வயதிற்கு உட்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன் வள அறிவியல், விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி வடக்கு, வேம்பார் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE
தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.3000, பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.2000, செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.600, வெள்ளை செவ்வந்திபூ ஒரு கிலோ ரூ.400, செவ்வரளி ரூ.500, பெங்களூர் ரோஸ் ரூ.20, பூக்கள் கொண்ட கட்டு ரூ.400, அரளிப்பூ ஒரு கிலோ ரூ.500, பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூபாய் 300 விற்பனை ஆகிறது. பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் இன்று(டிச.31) இரவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆலயங்கள், பேருந்து நிலையங்கள் உள்ள பகுதிகளில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பைக் ரேஸ் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, அவ்வாறு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று (டிச.30) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் வைத்து இன்று(டிச.30) புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டிலான மூன்று சக்கர வண்டிகளை வழங்கினார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) 18 பேர் நிர்வாக காரணங்களுக்காகவும் விருப்ப மாறுதல் அடிப்படையிலும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக பணி மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகள் உயர்கல்வி படிக்கும் பொழுது அவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்த மாணவிகளுக்கு வழங்குவதை தமிழக முதலமைச்சர் இன்று காலை தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று (டிச.29) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100, ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.