India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் விளையும் ‘கருங்கண்ணி’ பருத்தியானது அப்பகுதி மண்ணுக்கு ஏற்ப பிரத்தியேகமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த பருத்தியாக வியாபாரிகளால் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளால் அந்த பருத்திக்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான அம்மன்புரம் பகுதியில் ‘மொந்தன்’ என அழைக்கப்படும் வாழைப்பழம் மிகவும் பிரசித்தி பெற்று, அப்பகுதியில் மட்டும் வளரக்கூடிய ஒரு வாழை இனமாக உள்ளது. இந்த நிலையில் இந்த பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மன்புரம் “மொந்தன் வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புவிசார் குறியீடு வழங்க வேண்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.
முத்துநகர் விரைவு ரயில் 1880 ஜனவரி 1ஆம் தேதி தனது முதல் பயணத்தில், சென்னை – தூத்துக்குடி இடையேயான 652 கி.மீ. தொலைவை 21 மணி நேரம் 50 நிமிடத்தில் கடந்தது. இந்த ரயில் தனது 144-ஆம் ஆண்டை நிறைவு செய்து 145-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கிட்டத்தட்ட 22 மணி நேரத்தில் தொலைவை கடந்த முத்துநகர் விரைவு ரயில், தற்போது 11 மணி நேரத்தில் சென்னையை சென்றடைகிறது. SHARE IT.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம்தோறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று(ஜனவரி 2) வடக்கு மண்டல அலுவலகத்தில், வடக்கு மண்டல பகுதி மக்களுக்காக நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதேபோல மற்றொரு 10 மீனவர்கள் ஜூலை 23ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதில் 2ஆவதாக கைது செய்யப்பட்ட 10 பேர் நேற்று(ஜன.1) விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன01) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
திருச்செந்தூர் ரயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் நடைமேடையிலிருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு ‘லிப்ட் வசதி’ செய்யப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சியினர், நடிகர் நடிகைகள், முக்கிய பிரபலங்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் ஒரே வார்த்தையில் ‘Happy New Year! ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில், பிறந்திருக்கக் கூடிய புதிய ஆண்டில் கடந்த ஆண்டும் பெருமழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவும், இனி இது போன்ற பேரிடர்கள் வராமல் பாதுகாத்திடவும், உலக மக்கள் அனைவரும் அமைதியாக பாதுகாப்பாக வாழவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடியில் வரும் ஜன.5ஆம் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அதன்படி ஓட்டப் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. எனவும் நடைபெற உள்ளது. *ஷேர்*
Sorry, no posts matched your criteria.