Tuticorin

News January 3, 2025

வீரத்தை விதைத்தவரின் பிறந்த நாள் இன்று

image

ஆங்கிலேயர்கள் என்றால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்ட மாட்டேன் என்று வீரமுழக்கமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த பாஞ்சாலங்குறிச்சி குறுநில மன்னராக இருந்த கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று.ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட அந்த சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவாக பாஞ்சாலங்குறிச்சியில் அவரது கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

News January 3, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று (ஜன.02) முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

தூத்துக்குடி அரசி அட்டை தாரர்களுக்கு இன்று (ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

தூத்துக்குடி அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

News January 3, 2025

விவசாய கடன் காலம் நீட்டிக்க கோரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாய கடன்கள் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது அணைகளில் தண்ணீர் திறந்து விட தாமதமானதால், வாழை போன்ற பயிர்களை இப்போதுதான் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தூத்துக்குடி மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

News January 3, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன02) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

News January 2, 2025

தூத்துக்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்

image

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 1லட்சத்து 15 ஆயிரம் மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த முகாம் கடந்த மாதம் 16 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு நாளை (3) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தொழில் வழிகாட்டு மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி ,டி.என்.யு.எஸ்.ஆர்.பி , டி.ஆர்.பி ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவதால் போட்டி தேர்வு எழுத விரும்புபவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடைய ஆட்சியர் இளம்பகவத் கேட்டுள்ளார்.

News January 2, 2025

நிலக்கடலைக்கு ‘ஜிப்சம்’ இடுவது அவசியம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நிலக்கடலை பயிர் செய்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள நிலங்களில் நுண்ணூட்டச் சத்து குறைவாக இருப்பதால் ஜிப்சம் இடுவதன் மூலம் நிலக்கடலையில் பருமன் ஒரே சீராக இருப்பதுடன், திரட்சியாகவும் மாறுவதற்கு உதவுகிறது என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

News January 2, 2025

புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

image

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!