India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குலசேகரன்பட்டினம் ஹசனியா பள்ளியில் இன்று முதல் 2 நாட்களுக்கு(ஜன.17 மற்றும் 18) குலசை சங்கமம் விழா நடைபெற உள்ளது. காலை 6 மணியளவில் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு புலவர் மா.இராமலிங்கம் தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறும். நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொள்ள உள்ளதாக விசிகவினர் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள கங்கன்குளம் கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று(ஜன.16 ) நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்று போட்டிளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.16) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100, ஹலோ போலீஸ் எண்: 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த நவீன் மற்றும் அவரது தம்பி சிவா(16) இருவரும் அவர்களது ஆட்டோவில் திசையன்விளையில் உள்ள பாட்டி வீட்டிற்கு உடன்குடி தாங்கியூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென குறுக்கே வந்த மாடு மீது மோதியதில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததில் 16 வயது சிறுவன் சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் பொங்கலன்று போக்குவரத்து விதிகளை மீறியதாக 326 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வன சரகர் பிருந்தா தலைமையில், வனத்துறையினர் சாயர்புரம் பகுதியில் நேற்று(ஜன.15) தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அங்கு நேரில் சென்ற வனத்துறையினர் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று ஜன.15) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
தூத்துக்குடி சில்வர் புரத்தில் வசிப்பவர் ஜான் பிரிட்டோ இவரது மகன் கிளின்டன் (24). இவர் தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகலைப் பகுதியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா(25) என்பவர், நேற்று(ஜன.14) காலையிலிருந்து மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் லெட்சுமணன், தம்பி என பாராமல் மகாராஜாவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து ஏரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 13.01.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம் திருச்செந்தூர் மணியாச்சி கோவில்பட்டி சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.