India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதில் அமைச்சருக்கு சொந்தமான தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது X தள பதிவில் தெரிவித்துள்ளது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை(24ம் தேதி) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர் நலச் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.*உங்க பிரண்ஸை இன்னைக்கே முடி வெட்ட சொல்லுங்க*
புதுக்கோட்டை அருகே உள்ளது வாகைகுளம் விமான நிலையம். இந்த விமான நிலையத்திற்கு கடந்த மாதம் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இந்நிலையில் இன்றும் போலீசாருக்கு விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் அங்கு கல்குவாரி ஒன்று அமைய உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர். இந்த நிலையில் இன்று(ஜன.22) அங்கு ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் வருகை தர உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாளை மணப்பெண் அலங்கார பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் மணப்பெண் அலங்கார பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கு உரிய மானிய திட்ட விவரங்களை பெறலாம்.18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். மாணவிகளுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும் என சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ முடிமண்ணை சேர்ந்தவர் சார்லஸ், இவர் மது போதையில் தனது பதினைந்து வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை எடுத்து தாய் இன்பத்தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் சார்லஸை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பாக்கியநாதன் விளையை சேர்ந்தவர் மாரிமுத்து. கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக இவரை இவரது மருமகன் நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த காளிராஜ் என்பவர் கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று(ஜன.21) காளிராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் வருவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுதும் ரஷ்யா ஆஸ்திரேலியா கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், உப்பு கொத்தி உள்ளான், செங்கால் நாரை போன்ற பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.
Sorry, no posts matched your criteria.