India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏரல் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. நேற்று நள்ளிரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ராஜ் கல்லால் தாக்கி சின்னத்துரையை கொலை செய்துள்ளார். ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி ராஜை கைது செய்தனர்.
தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.இதனை செயல்படுத்தாத தூத்துக்குடி மாவட்டத்தில் 89 நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.27) மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என சுமார் 522 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மாதாந்திர சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்தனர். அப்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலணியில் அழகர் பப்ளிக் தனியார் பள்ளி ஒன்று உள்ளது, இந்தப் பள்ளிக்கு இன்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அங்கு காவல்துறையினர் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் பள்ளி கதவினை இழுத்து மூடியுள்ளது. வெடிகுண்டு சோதனை முடிந்த பின்னரே குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்
குலசேகரப்பட்டினம் மாடசாமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன்(38). கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளி. இவர் நேற்று(ஜன.26) சக மீனவர்களுடன் கடலில் சிப்பி அரித்து கொண்டிருந்தபோது திடீரென்று மாயமானார். உடன் இருந்த மீனவர்கள் அவரை தேடியபோது அவர் கடலில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்திருந்தார். இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று ஜன.(26) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற 32வது தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி போட்டி நடைபெற்றது. அதில் புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் உதய கமலேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் பங்கு பெற்று மண்டல அளவில் பங்கு பெற தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அன்பு எடிசன் மனதார வாழ்த்தினார்
Sorry, no posts matched your criteria.