India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமையிடத்தில் Agricultural Officer, Global NRI Center Head ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரகள் 16-02-2-24-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு <
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (பிப்.12) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணை நடந்து, அதில் திருப்தி இல்லாத பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்கள் கலந்து கொண்டு தங்களது புகாரை மேல்முறையீடு செய்யலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற தைப்பூச திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. குறிப்பாக பொது தரிசனத்திற்கு செல்பவர்களை ஆட்டு கொட்டகையில் அடைத்து வைப்பது போல் அடைத்து வைத்து அவர்களுக்கு குடிநீர் வசதி கூட செய்து கொடுக்காமல் நீண்ட நேரம் காக்க வைத்திருந்தது. கடும் கண்டனத்திற்குரியது என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின் புதூர், தோணுகால் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று விமான ஓடுதளம் அமைத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக விமான ஓடுதளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் அங்கு விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (பிப்10) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது அழுகிய முட்டைகளை கொண்டு எறிய வேண்டும் என எக்ஸ் தள ஸ்பேஸ் மீட்டிங்கிள் கபிலன் என்பவர் பேசியது பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், சட்ட ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசிய அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்திட வேண்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி காந்திமதிநாதன் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (10.02.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
விளாத்திகுளம் Ex. M.L.A.,சின்னப்பன் தாயார் P. வையம்மாள் வயது முதிர்வால் காலமானார். இந்நிலையில், அவருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “சின்னப்பன் தாயார் இறந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன்; தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் சின்னப்பனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்.11 அன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோடாங்கிபட்டி, செய்துங்கநல்லூர், முத்தையாபுரம்,ஆறுமுகநேரி பகுதிகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகளையோ, சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.