India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு CBIக்கு மாற்றப்பட்டுள்ளது. விவி மினரல், டிரான்வேல்ட் கார்னெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளை வழக்கில், உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், அவற்றின் வரவு செலவை கணக்கை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்ககு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், பொது இடங்களில் கிடைக்கும் இலவச ‘Wi-Fi’ பயன்படுத்துவதை தவிர்ப்பீர். அவ்வாறு பயன்படுத்துவதன் உங்கள் போனில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு, சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள எனவும், விழிப்புணர்வோடு செயல்படவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நாளை (17) தூத்துக்குடியில் காலை 8 மணிக்கு பி.என்.டி. காலனி பகுதியில் திறந்தவெளி விளையாட்டு அரங்கை திறந்து வைக்கிறார். அதன்பின் கருப்பட்டி சொசைட்டி அருகே முதியோர் மகிழ்விட பூங்காவையும் 10 மணிக்கு மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்க உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நூதன முறையில் சைபர் மோசடி நடைபெறுவதாக தகவல். மர்மநபர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கால் பண்ணி,’உங்கள் மகன்/மகளுக்கு ஸ்காலர்ஸிப் வந்துள்ளது; வங்கியில் மினிமம் ரூ.5000 இருந்தால், ஸ்காலர்சிப் கிடைக்கும்” என கூறுகின்றனர். இதைநம்பி ரூ.5000-ஐ வங்கியில் செலுத்தியவர்களிடம் OTP ஒன்றை அனுப்பி அந்த பணத்தை திருடுகின்றனர்.*உங்களுக்கு கால் வந்தால் 1930-ஐ(சைபர் கிரைம்) அழைக்கவும்
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காயல் அகமது சாஹிபு என்பவரை மாநில தலைவர் ரவி நியமித்து அறிவித்துள்ளார். அவருக்கு மண்டல தலைவர் கோடீஸ்வரன், தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மற்றும் பேரமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொந்தரவு குறித்து 14417 என்ற டோல்-ஃப்ரீ எண்ணில் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்மைய காலமாக கல்வி நிறுவங்களில் மாணவ- மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தியில் எழுதப்பட்ட ‘தமிழ்நாடு’ என்பதை கருப்பு மை மூலம் அழிக்கும்படி பதிவிட்டுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டிற்கு நிதி தரமுடியாது என்று ஒன்றிய அமைச்சர் கூறிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “ஊடகங்களை முடக்குவதும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதும் ஒன்று; இதழியல் துறையில் நூற்றாண்டு காணும் Vikatan EMagazine நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்; ஒன்றிய அரசு உடனடியாக முடக்கப்பட்ட இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்; ஊடக சுதந்திரம் காக்க ஒருமித்த குரல் கொடுப்போம்’ என்றுள்ளார்
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது; அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இதுபோன்ற பெருந்திரள் மக்கள் கூடும் விழாக்களை நடத்தும் போது, உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை” என்றுள்ளார்
Sorry, no posts matched your criteria.