Tuticorin

News February 18, 2025

தூத்துக்குடியில் அதிமுக முக்கிய அறிவிப்பு

image

2026-இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் உடன் இணைந்து விரைவாக பணியை முடிக்க தெற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் பிஜி ராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூரி வேலாயுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

ஸ்ரீவைகுண்டம்: பாலியல் தொந்தரவு – ஆயுள் முழுவதும் சிறை!

image

ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் முருகன்(36). கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இவரை ஸ்ரீவை., அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், முருகன் தனது எஞ்சிய காலம் முழுவதும் சிறையில் இருக்கும்படி ஆயுள் கால சிறை வழங்கி தூத்துக்குடி போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News February 18, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ரோந்து போலீசாரின் விவரம்

image

தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று பிப்.(17) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது

News February 17, 2025

தூத்துக்குடி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 474 கோரிக்கை மனுக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் மனு நாளில் பெறப்பட்டன.

News February 17, 2025

வாட்டர் ஹீட்டர் பயன்பாடு: மின்வாரியம் அறிவுரை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பனி அதிகமாக இருப்பதால் மக்கள் குளிக்கும்போது வாட்டர் ஹீட்டர் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குளிர்கால வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகமாக உள்ளது அதே நேரத்தில் இதை பயன்படுத்துபவர்கள் சூடு ஏறியதும் வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சை ஆப் செய்து விட்டு வெந்நீரை எடுத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.

News February 17, 2025

மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற “கணேசன்” என்பவர் மிகப்பெரிய கபடி வீரர் ஆவார். இவரது வாழ்க்கை வரலாறை வைத்து பைசன் (காளை மாடன்) என்ற தலைப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை எடுத்து வந்த நிலையில், தற்போது அதற்கான படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது என மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்தார்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.2.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 20.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன முறை வரிசை (Queue Complex), நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் கலையரங்கம் ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

News February 17, 2025

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரி சார்பில் தூத்துக்குடி வ உ சி கலைக் கல்லூரியில் (22.02.2025) அன்று காலை 9 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். *வேலைதேடுவோருக்கு பகிரவும்*

News February 17, 2025

தாது மணல் கொள்ளை வழக்கு CBIக்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

image

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு CBIக்கு மாற்றப்பட்டுள்ளது. விவி மினரல், டிரான்வேல்ட் கார்னெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளை வழக்கில், உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், அவற்றின் வரவு செலவை கணக்கை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்ககு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!