Tuticorin

News February 24, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய வெயில் தாக்க நிலவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கோடை வெயில் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் கடற்கரை பகுதியில் வெயில் பதிவு சற்று குறைவாகவே இருந்தது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் அதிகபட்சமாக 87 பாரன்ஹீட் டிகிரி வெப்பம் பதிவானது. திருச்செந்தூரில் 85 டிகிரி வெப்பம் பதிவானது. பகல் நேர வெப்பம் அதிகரித்ததால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது.

News February 23, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (பிப்.23) இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News February 23, 2025

தூத்துக்குடி வருகை தந்த லெஜண்ட் சரவணன்

image

திரைப்பட நடிகரும் தொழில் அதிபருமான லெஜெண்ட் சரவணன் இன்று தூத்துக்குடி வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடும் பணியில் ஈடுபட்டு வரும் ஆல கேன் டிரஸ்டை சேர்ந்த அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆலமரக்கன்றை பரிசாக வழங்கினார். அதற்கு நடிகர் சரவணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

News February 23, 2025

விவசாயிகளுக்கு ரூபாய் 250 கோடி கடன்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இம் மாதம் 15 ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு ரூபாய் 250.35 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது.இதில் குரு விவசாயிகளுக்கு மட்டும் 184.50 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News February 23, 2025

தூத்துக்குடியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடியில் இன்று நடந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 517 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றனர். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 23, 2025

தடைகளை நீக்கும் பிள்ளையார்

image

தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் சிவன்,அம்பாள் சந்நிதி இருந்தாலும் விநாயகப் பெருமானே பிரதான மூர்த்தியாக ஆட்சிபுரிகிறார். கேது தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் அந்தத் தடை நீங்க இங்குள்ள பஞ்சமுக விநாயகருக்கு நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் தடைகள் நீங்கும், கல்யாண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை.

News February 23, 2025

ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் நேற்று அதிகாலை (பிப்.22) இனிகோ நகர் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள  வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 22, 2025

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல்!

image

தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நேற்று(பிப்.21) தூத்துக்குடி 3வது மைல் பைபாஸ் சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த தனலட்சுமி மற்றும் மதுரையை சேர்ந்த முருகன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News February 22, 2025

தூத்துக்குடி: காவல்துறையினருக்கு இலவச பயண அட்டை!

image

காவல்துறையினர் பணி நிமித்தமாக சொந்த மாவட்டங்களில் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று(பிப்.21) தூத்துக்குடி மாவட்டத்தில் 2,650 காவல்துறையினருக்கு இலவச பயண அட்டை வரப்பெற்றுள்ளது. இதனை கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் காவல்துறையினருக்கு வழங்கினார்.

News February 22, 2025

தூத்துக்குடி: ரூ.60 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்றிரவு(பிப்.21) திரேஸ்புரம் கடற்கரையில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது மினி லாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!