India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதன்படி நேற்றிலிருந்து இன்று காலை 6 மணி வரை கோவில்பட்டியில் 11.50 மில்லி மீட்டர் மழையும், ஒட்டப்பிடாரத்தில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று(பிப்.26) பரவலாக 36.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் +2 தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25 வரை நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 496 மாணவர்கள் +2 தேர்வு எழுதுகின்றனர். இதே போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. இதில் 61,266 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(பிப்.26) தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(பிப்.26) பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 59 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்யும். மேலும் தென் தமிழகத்தில் கனமும் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆர்வலர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் நேற்று(பிப்.25) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், வடை உள்ளிட்ட தின்பண்டங்களை அச்சிட்ட காகிதங்களில் விற்கக் கூடாது என்று உணவு வணிகர்களையும், இலை மற்றும் அச்சிடாத காகிதங்களில் வழங்கினால் மட்டுமே வாங்குமாறு நுகர்வோர்களுக்கும் அறிவுறுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மாசற்ற மஞ்சள் பைகளை உபயோகிக்கும் வகையில் மஞ்சள் பை விருது வழங்கி வருகிறது. முதல் பரிசு பத்து லட்சம், 2வது பரிசு 5 லட்சம், 3வது பரிசு 3 லட்சம் வழங்கப்படுகிறது.தங்களது வளாகங்கள் பள்ளிகள் கல்லூரிகள் போன்றவைகளில் போன்றவற்றில் பயன்பாடு முற்றிலும் இல்லாதவர்கள் இந்த பரிசுக்காக விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
கோம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த நாளை (26) பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம எஸ் பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் இதில் காவல் காவல்துறையில் அளித்து நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் போன்றவைகள் போன்றவை மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்புறங்களில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு, உடன்குடி, தலையூத்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.