India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்/அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது; இன்று கயத்தாரில், நாளை கடம்பூரில், 4 ம் தேதி தூத்துக்குடி, 5ம் தேதி கழுகுமலையில், 6ம் தேதி விளாத்திகுளம் கிழக்கில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்பு திருநெல்வேலி சீமையில் மிகப்பெரியபாளையம் எட்டையாபுரம் ஆகும். இதனை ஆண்ட மன்னர்கள் எட்டப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். அப்போது, மக்கள் அரசு களஞ்சியத்தில் நெல்லை அளந்து கொடுக்கும்போது லாபம் 1,2,3,4,5,6,7 என்று அளக்கும் அவர்கள் 8 க்கு பதில் ராஜா என்பார்களால். எட்டு என்றால் (எட்டப்பர்) ராஜாவை குறிக்கும் என்பதால் எட்டாம் நம்பரை அப்போது சொல்வதில்லையாம். *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க
புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.
விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடன் இருந்தார்.
தூத்துக்குடி VOC துறைமுகத்தில் Chief General Manager பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 1 காலியிடம் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு <
சிப்காட் அமைப்பது தொடர்பாக எட்டையபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று சிப்காட் தனி டி.ஆர்.ஓ ரேவதி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் சிப்காட் வேண்டாம் என, ஒருமித்த குரலில் கூறி கோரிக்கை மனுவையும் வழங்கினர். அப்போது, விவசாயி ஒருவர் சிப்காட் வேண்டாம் எனக்கூறி டி.ஆர்.ஓ., காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டி.ஆர்.ஓ இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை (2) பகல் 12 மணிக்கு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை பார்வையிடுகிறார். அதன்பின் வட வல்லநாட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். அதனை எடுத்து உப்பாற்று ஓடையில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் அவர் தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக தூத்துக்குடியில் தான் மக்ரூன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை 100 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியவர் சின்ன நட்டாத்தியை சேர்ந்த அருணாசலம் பிள்ளை. இவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது போர்த்துகீசியரிடம் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மக்ரூன் என்பது போர்த்துகீசிய சொல், தூத்துக்குடியில் அறிமுகமானதால் தூத்துக்குடி மக்ரூன் என அழைக்கப்படுகிறது.*நண்பர்களுக்கு பகிரவும்*
தென்னகத்தின் உரிமைக்குரலாய், தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய், தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய், தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் அண்ணனின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என கனிமொழி MP ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.