India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-2026க்கான தமிழகத்தின் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது தமிழக அரசு. இவை போக இன்னும் 7 அரசு கலைக் கல்லூரிகள் தமிழகம் முழுவதும் வர இருக்கின்றன. *ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
தூத்துக்குடி VOC துறைமுகத்தில் Consultant, Professional Intern என மொத்தமாக 18 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள் 20-03-2025. Any Degree, BE/B.Tech, CA/CMA, Diploma, M.Com, M.Sc, MA, MBA, ME/M.Tech தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும் . <
தூத்துக்குடியில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த முருகன் தூத்துக்குடி மண்டல துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார் அருணா கலெக்டர் அலுவலகத்திற்கும் ராஜேஸ்வரி தூத்துக்குடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும் பாக்கியலட்சுமி திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தாராகவும் தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் வந்தனர். அங்கு மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் ஜாதியை குறிக்கும் எழுத்துக்களை அழிக்க மாணவர்களே முன்னெடுப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்படி, பெயிண்ட் டப்பாக்களை கொடுத்து, மாணவர்களையே அந்த எழுத்துக்களை நீக்கச் செய்தார்.*ஷேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. *தேவைபடுவோருக்கு பகிரவும்*
ஒரு சிலிர்க்க வைக்கும் ஊர் பெயர் தான் எப்போதும் வென்றான். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த சோலையப்பன் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிக்கு உதவினார். அதனால் பாண்டிய மன்னர் அவரை எப்போதும் வென்றான் சோலையப்பன் என அழைத்தார். அதுவே எப்போதும் வென்றான் என ஊர் பெயராகியது. போர் ஒன்றில் சோலையப்பன் இறந்துவிடவே ராஜகம்பள சமூகத்தினர் அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஷேர் it
தமிழக வெற்றிக் கழகத்தின் 19 மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு இன்று (மார்ச்.13) வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்த முறை அறிவிப்பு வெளிவரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை மத்திய மாவட்டத்திற்கு SDR சாமுவேல்ராஜ், வடக்கு மாவட்டத்திற்கு பாலசுப்பிரமணியன், தெற்கு மாவட்டத்திற்கு அஜிதா ஆக்னல் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல். *உங்கள் கருத்து என்ன?
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை நெல்லை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 11வது திருவிநாளான இன்று(மார்ச் 12) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலையில் சுவாமி யாதவர் மண்டகப் பணியில் அபிஷேகம் அலங்காரமாகி எழுந்தருளுகிறார். இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து அடைகிறார். அங்கு தெற்கு உற்சவம் நடைபெறுகிறது. SHARE IT.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்பு எண்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.