India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிசர்-7, ஸ்டாஃப் நர்ஸ்-7, ஹெல்த் இன்ஸ்பெட்கடர்-7, சப்போர்ட் ஸ்டாஃப்-7 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்களை <
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் -க்கு கனிமொழி எம்.பி இன்று (மார்ச்.15) நன்றி தெரிவித்துள்ளார். “வேளாண்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கவும், மானியங்களின் வழியாக விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து” செய்தி வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இந்து கோவில்கள் உள்ளன. அதப்படி, சுமார் 181 பிரபல அம்மன் கோவில்களும், 51 சிவன் கோயில்களும், 101 பெருமாள் கோவில்களும் உள்ளன. இதில், ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகளும், பெருமைகளும், வரலாறுகளும் உள்ளன. இதைதவிர்த்து, சுடலை, முருகன், அய்யனார் கோவில் என இன்னும் இருக்கின்றன. உங்க ஊருல என்ன கோவில் இருக்கு, அதோட சிறப்பு என்னனு கமெண்ட் பண்ணுங்க.*நண்பர்களுக்கு பகிரவும்
நீலக்கடல் அலைகள் அதன் அருகே நீண்ட அழகிய கடற்கரை, ஆங்காங்கே அதிசய வைக்கும் மணல் குன்றுகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், போர்ச்சுகீசிய மாடலில் தேவாலயங்கள், பிரமாண்ட பழமை மாறாத வீடுகள் உள்ள ஒரு கடற்கரை கிராமம் தான் மணப்பாடு. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்துக்கு சென்றால் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அதனால் தான் இதை சின்ன ரோமாபுரி என்கிறார்கள்.*நண்பர்களுக்கு பகிருங்கள் மக்கா*
“இந்தியை எதிர்த்துவிட்டு, நிதி ஆதாயத்திற்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதில் என்ன லாஜிக் இருக்கிறது?” என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி, “மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க, தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது” என, பவன் கல்யாண் 2017 ல் இந்திக்கு எதிராக பேசியதை BEFORE BJP & AFTER BJP என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2025-26 அறிவிப்பின்படி, ரூ.6.16 கோடி மதிப்பீட்டில்
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகமும், 51 நீர்வடிப்பகுதிகளில் 30,910 எக்டர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகளில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச்.15) வெளியிடப்பட்டு வருகிறது. ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி, சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு, தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது வேளாண் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி தமிழக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் சஜி இன்று(மார்ச் 15) உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு கூட்டத்தின்போது அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம், சஜி நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்தவர் வெள்ளி சிவி என்ற ராஜா (37). இவரை கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் சுரேஷ் மதுபோதையில் கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.