India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.22) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் முறையாக மாணவர்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இணை இயக்குனர் முனியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்றைய வலைத்தள பக்கத்தில் குழந்தைகளின் நடத்தை, அவர்கள் பயன்படுத்தும் செல்போன் ஆகியவற்றை பெற்றோர்கள் தவறாமல் கண்காணிக்க வேண்டும். சரி – தவறு என்ற வித்தியாசம் தெரியாத இளம் வயதினரையே போதை பொருள் கடத்தல் கும்பல் குறிவைக்கிறது. ஆதலால் பெற்றோர்களாகிய நீங்கள் விழிப்புடன் இருப்பது ஒவ்வொருவரையும் கடமை என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் அறிவுரை வழங்கியுள்ளனர்.
திருச்சி ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் 22, 24, 26 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8:25க்கு பதிலாக இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் தாமதமாக 10:35க்கு புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் பேசியபோது, மாணவ – மாணவியர்கள் இந்த வயதில் கல்வி கற்கவில்லை என்றால், வேறு எந்த வயதிலும் உங்களால் கல்வி கற்க முடியாது. நீங்கள் எந்த ஒரு காலத்திலும் கல்வியை கைவிட்டுவிட கூடாது. இங்கு இருக்கும் சில மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை என்றால் நிச்சயமாக மாவட்ட நிர்வாகம் மூலமாக உதவி செய்யப்படும் என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மறைந்த ஜோ வில்லவராயரின் மூத்த புதல்வர் ஜேசையா வில்லவராயர், பனிமய மாதா ஆலய அதிபரை இன்று(செப்.21) சந்தித்து தந்தையார் பொறுப்பில் உள்ள ஓஎல்எல் டிரஸ்ட் ரூ.33,50000 வங்கி காசோலை ஆணங்களை பங்கு பேரவை செயலர் எட்வின் பாண்டியன், முன்னாள் பங்கு பேரவை துணை தலைவர் ஹார்ட்லி, வின்சென்ட் டே பால் சபை தலைவர், ஜூட் ரன், பங்கு மூத்த உறுப்பினர் வால்டர் முன்நிலையில் பங்கு பேரவைக்கு வழங்கினார்.
‘நெய்தல் 2024’ கலை திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியின் வரலாறு – பாரம்பரியம் – தொன்மைகளை பறைசாற்றும் விதமாக மாபெரும் புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று முத்து நகரின் வாழ்வியலை, உலகிற்கே படம்பிடித்துக் காட்டவும், வெற்றி பெறவும் பங்கேற்க விரும்புவோர் https://thoothukudicorporation.com/pc என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கனிமொழி எம்பி இன்று தெரிவித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார், இந்த வகையில் நாளை(செப்.22) மாலை விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கருப்பூர், கடலையூர், எட்டையாபுரம், கீழ இறால், எப்போது வென்றான் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.
துாத்துக்குடி மறவன்மடம் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன், 33, என்பவர் புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் வசித்தார்.அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 7:00 மணிக்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது டூ – வீலரில் வந்த 3 பேர், அவரை வெட்டி கொலை செய்து தப்பினர். கொலை குறித்து, புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.முருகன் மீதும், கொலை முயற்சி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Sorry, no posts matched your criteria.