Tuticorin

News March 7, 2025

VOC துறைமுகத்தில் மாதம் ரூ.2.60 லட்சம் வரை சம்பளத்தில் வேலை!

image

தூத்துக்குடி VOC துறைமுகத்தில் Chief General Manager பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 1 காலியிடம் இந்த வேலைக்கு இருக்கிறது. இங்கு <>’CLICK’<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.. கடைசி நாள் 08-03-2025. BE/B.Tech படித்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை(மாதம்) சம்பளம் கிடைக்கும். SHARE IT

News March 7, 2025

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தின் குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க மாதம் தோறும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடைபெறுகிறது. அந்தவகையில், தூத்துக்குடியில் மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் 8ம் தேதி தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டை கோருதல், நீக்கம், போன்றவைகளுக்கு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

அனிதா ராதாகிருஷ்ணனின் நாளைய நிகழ்ச்சிகள்

image

மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.07) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணியளவில் திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, 11 மணிக்கு நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு, 11.30 க்கு உடன்குடியில் சமுதாய வளைகாப்பிலும் பங்கேற்கிறார்.

News March 7, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News March 7, 2025

பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை செய்தி வெளியீடு

image

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

தூத்துக்குடி மக்களே பறவை கணக்கெடுப்பில் பங்கு பெறுங்கள்

image

வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், அதன்பிறகு வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வனச்சரக அலுவலரை 9597477906 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

News March 6, 2025

திருச்செந்தூர் இலை விபூதி பற்றி தெரியுமா?

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது பன்னீர் இலை விபூதியாகும். சூரசம்ஹாரம் முடிந்த பின் தேவர்கள் பன்னீர் மரங்களாக மாறினர். முருகப்பெருமானுக்கு 12 கை உள்ளது போல பன்னீர் இலைகளுக்கு 12 நரம்புகள் உள்ளன. திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியை அருந்தி ஆதிசங்கரர் காச நோயை குணமாக்கினார் என கூறப்படுகிறது. திருச்செந்தூர் இலை விபூதி வலிப்பு, குஷ்டம், குடல் புண் நோய்களை தீர்க்கவல்லது. ஷேர்

News March 6, 2025

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

image

தூத்துக்குடி மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சதாசிவம் உட்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

News March 6, 2025

தூத்துக்குடியில் 392 பேர் +1 தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் நேற்று(மார்ச் 5) +1 பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19,766 இத்தேர்வு எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 384 மாணவர்களே தேர்வு எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

News March 6, 2025

கடைசி நேரத்தில் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

image

குமரி – பாலக்காடு, எர்ணாகுளம் ரயிலில் உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!