Tuticorin

News October 20, 2024

சாத்தான்குளம் கொலை வழக்கில் 100 பக்கம் சாட்சியம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை 

image

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றினார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்  இன்பாரகு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News October 19, 2024

தூத்துக்குடி காவல்துறை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை ரோந்து வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த திட்டமிடப்பட்டது. இதன்படி இன்று முதல் கட்டமாக 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சிசிடிவி கேமரா போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இதனை நெல்லை சரக காவல் துறை துணைத்தலைவர் மூர்த்தி இன்று துவக்கி வைத்தார்.

News October 19, 2024

நுகர்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கினால் அவைகளுக்கு முறையாக பில் தருவதில்லை. இதன் மூலம் காலாவதியான பொருட்களை நுகர்வோர் வாங்கினால் அதற்கு நஷ்ட ஈடு கோர முடியாத நிலை ஏற்படுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பில் கேட்டு வாங்குவதுடன் காலாவதி தேதியையும் பார்த்து வாங்க தூத்துக்குடி நுகர்வோர் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 19, 2024

குடிமை பொருள் கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

குடிமை பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இது பற்றி பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க அரசு தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் அப் எண்ணாக 9677736557 என்ற எண்களை அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

குலசையில் கரை ஒதுங்கிய அதிசய சிலை 

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் கடற்கரை பகுதியில் நேற்று (அக்.18) கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் கடலில் அடித்து வரப்பட்ட யானை முகத்தான் சிலை ஒன்று கரையில் ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து சிலையை வணங்கி வருகின்றனர். 

News October 19, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (அக்.18) இரவு நேர ரோந்து பணிகளுக்குபோலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

News October 18, 2024

தபால் நிலையங்களில் ஆதார் சேவை சிறப்பு ஏற்பாடு

image

தூத்துக்குடி தபால் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையம் உட்பட 35 அஞ்சலகங்களில் ஆதார் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இம் மாதம் முழுவதும் இந்த அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புதிய ஆதார் அட்டை திருத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என்று தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

தூத்துக்குடியில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் 

image

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டை முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை போன்றவைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினராக அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் சீர்மரபினர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் 18 முதல் 60 வயது வரை உள்ள தொழில் நிறுவனங்களில் பணி புரியும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.